பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
மணலிபுதுநகர்:அய்யா கோவிலில், கோபுர ஆண்டு விழாவை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில், கோபுர ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி, நேற்று, கோபுர ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், 500 க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கலிட்டு, அய்யா வைகுண்ட தர்மபதியை வழிபட்டனர்.பச்சரிசி, பாசிப் பயிறு, தேங்காய் துண்டுகள், ஐந்து காய்ந்த மிளகாய் போன்ற பொருட்கள் கொண்டு, பொங்கல் தயாரிக்கப்படும். இனிப்பு, உப்பு போடுவதில்லை. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.