பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
ராயபுரம்:சென்னை ராயபுரத்தில், இன்று, வேடர்பறி உற்சவ திருவிழா நடக்க உள்ளது. பாரிமுனையில் உள்ள, முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில், பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இவ்விழாவின், 15ம் நாளான, இன்று மாலை, ராயபுரத்தில் உள்ள, வேடர்பறி மைதானத்தில், முத்துக்குமாரசுவாமி எழுந்தருள்கிறார். அங்கு, முருகன் தினைப்புலன் காத்து, வள்ளியை சிறை எடுத்து வருவது, கொண்டாடப்படுகிறது.இந்த வேடர் பறி உற்சவத்தில், அப்பகுதிகளை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெறுவர் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை, வள்ளி திருமணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.