பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை சர்வ மங்களா தேவியின் மடி மீது தலை வைத்து உறங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு நடைபெறும் விழாக்களில், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா, இன்று காலை, 7:00 மணிக்கு துவங்குகிறது. தினமும், மாலை, 4:00 மணிக்கு, சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு அன்னமாச்சார்யா கீர்த்தனை மற்றும் அரிகதை, நாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.