பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
திருத்தணி: திருத்தணி, சித்துார் சாலை, பொதுப்பணி துறை அலுவலகம் அருகில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், கடந்த மாதம், 28ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, மண்டலாபிஷேக விழா, 48 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை நடந்த மண்டலாபிஷேக விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில், நுாற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.