பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
திருப்பூர் :திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி தேர்த்திருவிழா, வரும் 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம், 1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.கொங்கு மண்டலத்திலுள்ள கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால் ேதவாரம் பாடப்பெற்ற ஸ்தலமுமாகிய, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி தேர்த்திருவிழா, வரும், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 24ல் சூரிய, சந்திரமண்டல காட்சிகள், 25ல் பூதவாகன காட்சி, 26ல் புஷ்பவிமான காட்சிகள் நடக்கிறது. 27ல், பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சியும், 28ல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
மார்ச் 1ல் தேதி, விநாயக பெருமான், சோமாஸ்கந்தர், ஸ்ரீ சண்முகநாதர் ஆகியோர் தேர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அன்றும், மறுநாளும், மாலை, 3:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவில், 3ல் பரிவேட்டை, குதிரை, சிம்மவாகன காட்சிகள், தெப்பத்தேர், 4ல் ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும், 5ல் தரிசன காட்சியும், 6ல் மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது.