யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நூற்றாண்டு விழா இன்னிசை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2018 02:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், நூற்றாண்டு விழா இன்னிசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நேற்று, பகவான் யோகிராம் சுரத்குமார் முழு உருவ சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை, 6:15 மணி முதல் இரவு, 8:15 மணி வரை, குருசரண் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. வரும், 12 வரை, தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகம் செய்திருந்தது.