பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
வாழப்பாடி: புனித லூர்து அன்னை திருத்தல வைரவிழா, வரும், 10ல் நடக்கிறது. வாழப்பாடி அருகே, அக்ரஹாரத்தில், புனித லூர்து அன்னை திருத்தல வைர விழா, கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 9 வரை, தினமும் மாலை, 5:30 மணிக்கு, திருச்செபமாலை, திருப்பலி, மறையுரை வழங்குதல் நடைபெறும். 10 காலை, 7:30 மணிக்கு, சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில், திருவிழா கூட்டுப்பாடற்திருப்பலி, 10:30 மணிக்கு, குணமளிக்கும் திருப்பலி, இரவு, 7:00 மணிக்கு, புனித லூர்து அன்னை திருத்தேர் பவனி வருதல் நடக்கவுள்ளது. வரும், 11 காலை, 7:30 மணிக்கு, நன்றி திருப்பலி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, பங்குத்தந்தை பிலவேந்திரம் செய்து வருகிறார்.