பதிவு செய்த நாள்
26
டிச
2011
10:12
தேனி:முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில், நிரந்தர சுமூகத் தீர்வு ஏற்பட வேண்டி, தேனி மாவட்டம் வீரபாண்டி கோயிலில்,ஐந்து மாவட்ட மேல்மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள் கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தினர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நடந்த வேள்வி பூஜையை, ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் அப்பாஸ் துவக்கி வைத்தார். பூஜையில் 21 கலசங்கள், இரண்டு சிறப்பு சக்கரங்கள் வைத்து யாக குண்டம் வளர்க்கப்பட்டு, 108, 1008 மந்திரங்கள் முழங்க, பகல் 1.30 முதல் 4 மணி வரை யாக பூஜை நடந்தது. பெண்களே நடத்திய இந்த வேள்வி பூஜையின் முடிவில், புனித கலச நீர் அருகில் உள்ள அணையின் நீர்த்தேக்கத்தில் தெளிக்கப்பட்டது. பூஜையில் முல்லைப் பெரியாறு அணையால் பயனடையும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், 5,000 செவ்வாடை பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.