Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரைக்கும் நெருப்புக்கும் தொடர்பு ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடை உரிமையாளர்களுக்கு திடீர் உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடை ...
முதல் பக்கம் » மீனாட்சி கோயிலை காப்போம்
மதுரை மீனாட்சி கோயிலில் 300 நாளும் திருவிழா!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோயிலில் 300 நாளும் திருவிழா!

பதிவு செய்த நாள்

07 பிப்
2018
01:02

மதுரை மீனாட்சி கோயிலில் பாரம்பரியம் மற்றும் வரலாற்று பெருமை பேசும் பல பொக்கிஷ சின்னங்கள் நிரம்பியுள்ளது. அதன் அருமை, பெருமைகளை எல்லாம் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் தெரிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும். சில தகவல்கள்...

* மீனாட்சி கோயிலில் விநாயகரின் அறு படை வீடுகளில், நான்காம் படை வீடு உள்ளது. (தெற்குகோபுரம், இலவச தரிசனம் செல்லும் வழியில் உள்ள சித்தி விநாயகர்)

* மீனாட்சி அம்மன் விக்ரஹம் மரகதக் கல்லால் ஆனது. அம்மன் கருவறையை 32 சிங்கம், 64 சிவ கனங்கள், 8 கல் யானைகள் தாங்கி நிற்கிறது.* சுவாமி சன்னதியில் உள்ள சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். கருவறை விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. அதற்கு அடையாளமாக விமானத்தில் இந்திரனின் வெள்ளை யானைகள் இருக்கிறது.

* உலகிலேயே சிவனின் திருவடி, திருமுடி (பிட்டுக்கு மண் சுமந்த போது) பட்ட ஒரே தலம் மதுரை தான்.* உலகிலேயே ஐந்து வாசல்கள் உள்ள ஒரே கோயில் மீனாட்சி கோயில் தான். (கிழக்கில் இரண்டு வாசல் உள்ளது). மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளது, தெற்குகோபுரம் மட்டும் 160 அடி உயரம்.* மீனாட்சி கோயில் ஒரு சிவ தலம். கோபுரங்களில் சிவ சிவா என்று இருப்பதே அதற்கு சாட்சி.

* கோயில் உள் பிரகாரங்கள் மற்றும் கோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோடி சிற்பங்கள் உள்ளன. இதில், தெற்கு கோபுரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதைகள் உண்டு.* இக்கோயிலின் தல விருட்சமான கடம்ப மரம் மேற்கு கோபுர வாசலில் உள்ளது.* தெற்கு, கிழக்கு வாசல் வழி வந்தால் மட்டுமே கோயிலுக்குள் நேரடியாக வரமுடியும். வடக்கு, மேற்கில் நுழைந்தால் ஆடி வீதியை சுற்றித் தான் உள்ளே வரமுடியும்.* பொற்றாமரைக் குளம் என்ற பெயருக்கு ஏற்ப தங்கத் தாமரை இங்கு உள்ளது.

* சுவாமி சன்னதி பகுதியில் உள்ள துர்க்கை சன்னதி அருகே கோயிலில் சிவனே வல்லப சித்தர் என்ற பெயரில் சித்தராக உள்ளார்.* ஆண்டிற்கு 300 நாட்களும் கோயிலில் ஏதாவது ஒரு விழா இருக்கும். மீதமுள்ள 65 நாட்களில் கூட விழா ஏற்பாடுகள் தான் நடக்கும்.இது ஒரு புதன் தலம் என்பதால் சொக்கநாதரை புதன் கிழமை தியானம் செய்து வழிபடுவது நல்லது.

* வீரவசந்தராய மண்டபம் 1611ம் ஆண்டு கட்டப்பட்டது. தொட்டி நந்தி சிற்பம் இரண்டு ஆயிரம் ஆண்டு பழமையானது.* பொற்றாமரை குளத்தின் கிழக்கில் இருந்து பார்த்தால் அம்மன், சுவாமி சன்னதி என இரண்டு தங்கக் கோபுரங்களை பார்க்கலாம். அஷ்ட சக்தி, மீனாட்சி நாயக்கர், முதலி, ஊஞ்சல், கம்பத்தடி, கிளிக் கூட்டு, மங்கையர்கரசி, சேர்வைக்காரர் போன்ற மண்டபங்கள் உள்ளன.

* வடக்காடி வீதியில் ஐந்து மற்றும் ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு இசைத் துாண்கள் உள்ளது.* இந்த கோயிலில் மட்டும் இடது காலை ஊன்றி, வலது காலை துாக்கி ஆடும் நடராஜரை காணலாம்.

* கிழக்கு கோபுரம் எதிரில் உள்ள புதுமண்டபத்தில் 124 சிற்பத்துாண்கள் உள்ளன.* சித்திரை திருவிழா, முடிசூட்டுதல், திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

* சுவாமி சன்னதி பிரகாரங்களில் 64 திருவிளையாடல் சிற்பங்கள் உள்ளன.* 51 சக்தி பீடத்தில் மீனாட்சி கோயில் ராஜ மாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கப்படுகிறது.* தமிழகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் 366 கோயில்கள் உள்ளன, அதில் இது தான் முதல் கோயில்.* தேவார பாடல் பெற்ற சிவ தலங்களில் இது 192வது கோயில்.

* நடராஜர் சன்னதி வெள்ளியம்பலம் என்பதால் சன்னதி முழுக்க வெள்ளியால் செதுக்கப்பட்டுள்ளது.* சிவனின் 64 சிவ வடிவங்களையும் சுவாமி சன்னதி எதிரில் உள்ள கொடிமர நந்தி மண்டபத்தில் பார்க்கலாம்.

* நான்மாடக் கூடல், ஆலவாய், கடம்பவனம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது.மீனாட்சி கோயிலில் இது போல இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அதன் மகத்துவம் உணர்ந்து கோயிலை நம் கண்போல காக்க வேண்டும்.

 
மேலும் மீனாட்சி கோயிலை காப்போம் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல ஐகோர்ட் மதுரை கிளை தடை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சமையல் புகையால், புராதன கோபுரங்கள், கலைநயமிக்க கோயில் கட்டடங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராய மண்டபம் பகுதியில் புனரமைப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவங்களை தடுக்க, கிழக்கு ஆடி வீதியில் இரண்டு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து, உயர்மட்ட ஆய்வுக்குழு நேற்று முதற்கட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar