பதிவு செய்த நாள்
08
பிப்
2018
11:02
பழிநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் உண்டியலில் 15 நாட்களில் ரூ.2 கோடியே 37 லட்சத்து 7 ஆயிரம் வசூலாகியுள்ளது.
பழநிமுருகன் கோயிலில் கடந்த ஜன., 25 முதல் பிப்., 3 வரை தைப்பூசவிழா நடந்தது. இதனைமுன்னிட்டு, பாதயாத்திரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. 15 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ. 2 கோடியே 37 லட்சத்து, 07 ஆயிரத்து 709 ம், தங்கம் 711 கிராமும், வெள்ளி 19,800 கிராமும், வெளிநாட்டு கரன்சி 372 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வழக்கமாக ஒரு மாதத்தில் ரூ. 1.5 கோடி வரை கிடைக்கும். தைப்பூசவிழா காரணமாக 15 நாட்களில் ரூ. 2.37 கோடி கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட மூன்றுமடங்கு அதிகமாகும். தொடர்ந்து பிப்., 9ல் (நாளை) உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.