விக்கிரவாண்டி: உலகலாம்பூண்டியில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி தாலுகா, உலகலாம்பூண்டியில் உள்ள உலகலந்த பெருமாள் கோவில், கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைமுடிந்து மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பாடு நடந்தது. காலை 7:20 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை பண்ருட்டி ரகுநாத பட்டாச்சாரியார் தலைமையில், ஸ்ரீராம் பட்டாச்சாரியார், நாராயணன் பட்டாச்சாரியார் செய்து வைத்தனர். விழாவையொட்டி, திருக்கோவிலுார் ஸ்ரீனிவாச ராமானுஜ ஜீயர் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் உலகளந்த பெருமாள் பஜனை குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.