பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
செங்கல்பட்டு:ஈச்சங்கரணை கிராமத்தில், பூமி தேவி கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, ஈச்சங்கரணை கிராமத்தில், மஹா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில், வளாகத்தில், கடந்த ஆண்டு, பூமி தேவிக்கு கோவில் கட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருப்பணியை துவக்கியது. அதன் பின், அனைத்து திருப்பணிகளும், சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதையடுத்து, 5ம் தேதி, கும்பாபிஷேக விழா, மங்கள இசையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:45 மணிக்கு, பூமி தேவி அம்பிகை கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சென்னை உட்பட பல இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.