பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே, பெத்தாம்பட்டி, காளியம்மன் கோவில் தை திருவிழாவையொட்டி, நேற்று காலை, ஊர் எல்லையிலிருந்து சக்தி கரகம், பூங்கரகம், உற்சவர் சுவாமி சிலைகளை, திரளான பக்தர்கள் தோளில் சுமந்து, கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, ஊரின் நான்கு எல்லை, கோவில் பின்புறம், ஐந்து எருமை கன்றுக்குட்டிகளை பலியிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து, அலகு குத்தி, வேண்டுதலை நிறைவேற்றினர்.