பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
தலைவாசல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தை மாத தேய்பிறை அஷ்டமியை, தேவ தேவாஷ்டமியாக, தலைவாசல், ஆறகளூரில் உள்ள, காமநாதீஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நேற்று அதிகாலை முதலே, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி பைரவரை வழிபட்டனர். தொடர்ந்து, எட்டு பைரவர்களுக்கும், தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதியம், பைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது. அதேபோல், ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிரா தேவி மற்றும் சொர்ண பைரவருக்கு, உலக நன்மை வேண்டி, சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. பிரித்தியங்கிரா தேவி, சொர்ண பைரவர், வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.