பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
ஓமலூர்: ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம், வெகுவிமரிசையாக நடந்தது. ஓமலூர் அருகே, பல்பாக்கியில் உள்ள, ஓங்காளியம்மன், மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா, கடந்த, 23ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, கோவில் வளாகத்தை சுற்றி, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. மாலை, 5:15 மணிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன், தேரை வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கிவைத்தார். தொடர்ந்து, கேரள செண்டை மேளம் முழங்க, திரளான பக்தர்கள், தேரை இழுத்து, கோவிலைச் சுற்றி வலம்வந்தனர். பின், ஓங்காளியம்மன், மாரியம்மன், விநாயகர் ஆகிய மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் சாத்தப்பட்டது.