கொடுமுடி: பிரசித்தி பெற்ற, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் வரும், 13 அன்று சிவராத்திரியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் இரவு, 12:00 மணி முதல், 1:00 மணி வரை மஹா சிவலிங்க பூஜை நடைபெற உள்ளது. சிவலிங்க பூஜை செய்வதன் மூலம், உலகம் நன்மை பெறும். ஆபத்து தடைபடும், பாவங்கள் விலகும் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர். மேலும், சிவலிங்க பூஜையில் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.