பதிவு செய்த நாள்
08
பிப்
2018
03:02
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திருநீலகண்டருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இறைவன் களிநடனம் புரியும், தில்லைப்பதியிலே குயவர் குடியிலே - பிறந்தவர்தான் திருநீலகண்டர் என்பவர்.இவர் பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரின் திருவடிகளிலே மிகுந்த பக்தி கொண்டவர். அதுபோலவே, சிவன் அடியார்களிடத்து எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர். பொய் வாழ்க்கையை ஒழித்து, மெய் வாழ்க்கை வாழ்பவர். அறவழியில் வழுவாது நிற்பவர். எம்பெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும் இடையறாது நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இச்சிவனடியாரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு அழைக்கப்பட்டார்.
திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், திருநீலகண்டருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல், திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் திருநீலகண்டர் நாயனாருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நாயனார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.