பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
மேட்டூர்: நெல்லீஸ்வரர் கோவிலுக்கு, பஸ்சில் இலவசமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து, 2 கி.மீ., தூரத்திலுள்ள அச்சங்காட்டில், நெல்லீஸ்வரர், வேதநாயகி கோவில் உள்ளது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, இக்கோவிலில், இன்றிரவு, ஐந்து கால பூஜை நடக்கிறது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். அதற்காக, மேட்டூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, நெல்லீஸ்வரர் கோவிலுக்கு, இன்று இரவு முழுவதும், மினி பஸ் இயக்கப்படுகிறது. வாகன வசதி இல்லாத பக்தர்கள், இந்த பஸ்சில், இலவசமாக கோவிலுக்கு சென்று திரும்ப, விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.