பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
நாமக்கல்: நாமக்கல், அரங்கநாதர் சுவாமி கோவில் லட்சார்ச்சனை விழா, வரும், 15ல் துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது: அரங்கநாதர் கோவிலில், வரும், 15, 16 ஆகிய நாட்களில், லட்சார்ச்சனை நடக்கிறது. இரு நாட்களிலும் காலை, 8:30 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 மணி வரை, மாலை, 5:00 மணிக்கு துவங்கி, 8:00 மணி வரை நடக்கிறது. விருப்பமுள்ள பக்தர்கள், ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில், 400 ரூபாய் கட்டணம் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். வரும், 16 மாலை, 6:30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.