பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 81ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த, 31ல் நடந்தது. விழா முடிந்து, கோவில் உண்டியல் எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா மற்றும் கிருஷ்ணகிரி ஆய்வாளர் சத்தியா ஆகியோர் முன்னிலையில், 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் உண்டியல் பணத்தை எண்ணினர். உண்டியலில், ஐந்து லட்சத்து, 80 ஆயிரத்து, 435 ரூபாய் இருந்தது. தங்கம், 64 கிராம், வெள்ளி, 215 கிராம் இருந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சுதர்சன் செய்தார்.