பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
கோவை : மஹா சிவராத்திரியை முன்னிட்டு, துரைசாமி நகர் சுயம்பு தம்புரான் கோவிலில், நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, சிட்ரா அடுத்த கோல்டுவின்ஸ், துரைசாமி நகரில் சுயம்பு தம்புரான் கோவில் உள்ளது. இங்கு மஹா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுயம்பு தம்புரானுக்கு, பஞ்சகாவிய அபிேஷகம், தேன், இளநீர், பால், சங்கு அபிேஷகங்கள் என, நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டன. விழாவை முன்னிட்டு, சிறப்பு வேள்வி அமைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. கோவில் கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துரைசாமி நகர், ராமலட்சுமி நகர், ஹவுசிங் யூனிட் மற்றும் சுற்று பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.