காளாத்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2018 01:02
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி, நேற்று அதிகாலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசிமகத் தேரோட்டம் வரும் மார்ச் 1ல் நடக்கிறது. இதற்கான கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செயல்அலுவலர் செந்தில்குமார், நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். கொடி ஏற்றத்தை முன்னிட்டு காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானம்பிகை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7.30 மணி முதல் 9:00 மணிக்குள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனுமந்தன்பட்டி உத்தமநாச்சியம்மன், உத்தமபாளையம் பிடாரியம்மன் கோயில்களில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பிடிஆர் பண்ணை சார்பில் முதல் நாள் மண்டகப்படி நடந்தது. இதில் பி.டி.ஆர்., பண்ணையின் நிர்வாகி விஜயராஜன் பங்கேற்றார். தொடர்ந்து பக்தர்கள், இந்து ஆன்மிக மன்ற நிர்வாகிகள், அனைத்து சமுதாய சங்க நிர்வாகிகள் சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாட்கள் காலை மாலை என பல்வேறு சமூகத்தினர் மண்டகப் படி நடத்துகின்றனர். பிப். 28 ல் சுவாமி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் முதல் தேதி அதிகாலை சுவாமி அம்பாள் ரதம் ஏறுதல் நடைபெறும். தொடர்ந்து. அதன் பின், காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது.