பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த மாகறலில் உள்ள, மாகறலீஸ்வரர் கோவில், மாசி மகப் பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து, 15 கி.மீட்டரில் மாகறல் கிராமம் உள்ளது. இங்கு சைவ, சமய குரவர், திருஞானசம்பந்தரால், திருப்பதிகம் பெற்ற, பழமையான திருமாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாதத்தில், மாசி மகப்பெருவிழா, 10 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு விழா, வரும், 20ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 1ம் தேதி இரவு, பஞ்சமூர்த்தி புறப்படுதல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
மாசிமக பெருவிழா சுவாமி புறப்பாடு விபரம்:
நாள் பகல் உற்சவம் இரவு உற்சவம்
பிப்., 20 துவாஜாரோகணம் இடப வாகனம்
பிப்., 21 சூரிய பிரபை சந்திர பிரபை
பிப்., 22 பூத வாகனம் மாவடி சேர்வை
பிப்., 23 கேடய உற்சவம் நாக வாகனம்
பிப்., 24 அதிகார நந்தி திருக்கல்யாண உற்சவம்
பிப்., 25 இடப வாகனம் யானை வாகனம்
பிப்., 26 - தேரோட்டம்
பிப்., 27 பிச்சாடனார் உற்சவம் குதிரை வாகனம்
பிப்., 28 கேடய உற்சவம் ராவணேஸ்வரர் வாகனம்
மார்ச் 1 நடராசர் சேர்வை தீர்த்தவாரி பஞ்சமூர்த்திகள் புறப்படுதல், இடப வாகன உற்சவம்