பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
காஞ்சிபுரம் கோவில்களுக்கு வரும், வெளியூர் பக்தர்களுக்காக, திருமலை, திருப்பதி தேவஸ்தான விருந்தினர் இல்லத்தில், குறைந்த கட்டணத்தில், தங்கும் அறைகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம், சாலைத்தெருவில், ஏகாம்பரநாதர் கோவில் அருகில், திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின், தகவல் மையம் மற்றும் விருந்தினர் இல்லம் இயங்குகிறது.இங்கு, திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, 300 ரூபாய் தரிசனத்திற்கு மட்டும் முன்பதிவு செய்யப்படுகிறது.மேலும், வெளியூரில் இருந்து காஞ்சிபுரம் கோவில்களுக்கு, குடும்பத்துடன் வரும் வெளியூர் பக்தர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் தங்கும் அறைகள் வாடகைக்கு வழங்கி வருகிறது.
இதுகுறித்து, மைய ஊழியர் ஒருவர் கூறியதாவது: அறையில் தங்குவதற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி இல்லை. தற்போது இரு அறைகள் மட்டுமே உள்ளன. நேரில் வந்து தான் முன்பதிவு செய்ய வேண்டும். வெளியூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, குடும்பத்துடன் வரும், பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும்.நான்கு பேர் தங்கக்கூடிய அறை, 100 ரூபாய், ஆறு பேர் தங்கும் அறை, 200 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படும். மேலும், வெளியூரில் வசிப்பவர் என்பதற்கு அடையாளமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -