பதிவு செய்த நாள்
20
பிப்
2018
01:02
திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் வளாகத்தில், கருங்கல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.திருப்பூரை அடுத்த எஸ்.பெரியபாளையத்தில் உள்ள ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் வரலாற்று புகழ் வாய்ந்தது. நொய்யல் ஆற்றின் கிளை ஆறான, நல்லாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவில், பாண்டிய மன்னர்கள் காலமான, பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழகத்தில் கோவில் கட்டட கலைக்கு மிகப்பெரிய சான்றாக விளங்குகிறது இக்கோவில்.
சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி, தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். கோவில் கட்டிய இடத்தில் இருந்து எடுத்த கல்வெட்டு, ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபெருமான் வழிபடப்பட்ட தலமாக பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் இருந்தது தெரியவந்துள்ளது.இந்த @காவில், மிகவும் பழமையானது என்பதால், இந்திய தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இதனால், பெரிய மாற்றம், திருப்பணி செய்யாமல், கோவில் வழக்கம் போல் பராமரிக்கப்படுகிறது. கோவில் வளாகம், மண் தரையாக இருப்பதால், மழை காலங்களில் பக்தர்கள் வந்துசெல்ல சிரமப்படுகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் முயற்சியால், கோவில் வளாகத்தில் கருங்கல் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தெற்கே உள்ள பிரதான நுழைவாயிலில் இருந்து அம்மன் சன்னதி, சுக்ரீஸ்வரர் சன்னதி பிரகாரம் மற்றும் ஆங்காங்கே உள்ள லிங்க பீடங்களுக்கு சென்று வரும் வகையில், கருங்கல் தளத்துடன் கூடிய பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.