விழுப்புரம்: விழுப்புரத்தில் சுவாமி விவேகானந்தா தேசிய பேரவை சார்பில் பொது தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை நடைபெற்றது.விழுப்புரம் விஸ்வகர்மா சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கோட்ட இணை அமைப்பாளர் ராஜதுரை சிறப்புரையாற்றினார். பூஜையில் பொது தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 200 பேர் தங்களது பெற்றோருடன் தேக நலத்தோடு நல்ல மதிப்பெண் பெறுவதற்காக பூஜையில் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்காக ஸ்ரீ ஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், யாகம் வளர்க்கப்பட்டு, அதில் பூஜிக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் சூரியநாராயணன், மதுதண்டபாணி, பழனிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.