பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
பள்ளிபாளைம்: பள்ளிபாளையம், ஓங்காளியம்மன் கோவில் விழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பள்ளிபாளையத்தில், ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் திருவிழா நடைபெறும். இந்தாண்டு, நேற்று முன்தினம் இரவு, காவிரியாற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. ஏராளமான மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
* குமாரபாளையத்தில், காளியம்மன் கோவிலில் மகா குண்டம் திருவிழாவையொட்டி, கோவில் வளாக கொடிக்கம்பத்தில் கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்குழு தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 24 மனை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு ஐஸ்வர்ய குபேரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாக்குழு தலைவர் ஜெகதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.