பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
மோகனூர்: மோகனூர், லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை விழா நடக்கிறது. மோகனூர், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை விழா நடக்கிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் கல்வி வளர்ச்சிக்காக, தொழில் வளர்ச்சிக்காக மற்றும் உலக நன்மை வேண்டி விழா நடக்கிறது. நேற்று காலை, 9:00 மணிக்கு சங்கல்பம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவ வித்யா ஞான அனுகிரஹ யாகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று முதல், 25 வரை, காலை, 8:30 முதல், 12:30 மணி வரை லட்சார்ச்சனை, மாலை, 4:30 முதல், 7:30 மணிவரை லட்சார்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. 25 காலை, 7:00 முதல், 12:30 மணிக்கு மேதா ஹயக்ரீவ, மேதா சரஸ்வதி சர்வ வித்யா லட்சார்ச்சனை நிறைவடைந்து, அபி ?ஷகம் நடந்து, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு ஹயக்ரீவர் உற்சவர் கோவில் வளாகத்தில், சிறப்பு அலங்காரத்தில் திருச்சுற்று எழுந்தருளி, புஷ்பாஞ்சலி, கூட்டு பிரார்த்தனை, தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் சாந்தி, கோவில் அர்ச்சகர்கள் விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.