பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
ராசிபுரம்: ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலை, காளியம்மன் கோவிலில், வரும், 27ல் பொங்கல் விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, அன்று பூச்சாட்டுதல் நடக்கிறது. 28ல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மார்ச், 1ல், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து, காளியம்மன் கோவிலுக்கு சக்தி அழைத்து வருதல், தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். மார்ச், 3ல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் நீராடல், இரவு சத்தாபரணம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.