பதிவு செய்த நாள்
22
பிப்
2018
01:02
தர்மபுரி: இண்டூர் அடுத்த மாரியம்பட்டியில், திரவுபதியம்மன் கோவிலில் அக்கினி மகோற்சவ விழா நடக்கிறது. இதையொட்டி, வரும், 25ல் மாரியம்பட்டி பாஞ்சாலை அம்மன் கோவிலில் துவ ஜாரே கணம் செய்து, அலகு நிறுத்தி விழாவும், பகல், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை பாரத விரிவுரையும், கவி வாசித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் நாட்களில் பாண்டவர் கவுரவர் பாரில், மகாசூரன் வதையும், பாஞ்சாலி நாடும், மச்ச நாட்டில் மாடு மடக்குதல் என, பல்வேறு தலைப்புகளில் தினமும், சொற்பொழிவுகள் மார்ச், 16 வரை நடக்கிறது. மார்ச், 15 காலையில் படுகளமும், மாலை தீ மிதித்தல் விழாவும், 16ல் தருமர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.