சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், ஆய்வு நடத்தினார். சென்னிமலை முருகன் கோவிலுக்கு நேற்று மதியம், 2:50 மணிக்கு வருகை தந்த, இந்து சமய அறநிலைய துணை ஆணையாளர் ஜெயா, கோவிலின் வரலாற்று சிறப்புகளை கேட்டறிந்தார், இங்கு நடக்கும் பூஜை முறைகள் பற்றியும், கோவில் தூய்மை பற்றியும் ஆய்வு நடத்தினார், சென்னிமலை முருகனை தரிசனம் செய்த அவர், அங்கு அன்னதானம் சாப்பிட்டார். இரண்டு மணி நேரம் ஆய்வுக்கு பின், புறப்பட்டு சென்றார். கோவிலுக்கு வருகை தந்த ஆணையாளர் ஜெயாவை கோவில் தக்கார் முருகையா, செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் வரவேற்றனர்.