வேணுகோபாலசாமி கோவிலில் தீ தடுப்பு குறித்த செயல்விளக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2018 01:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வேணுகோபாலசாமி கோவிலில், தீ தடுப்பு குறித்த செயல்விளக்கம் நடந்தது. கடந்த, 15 நாட்களுக்கு முன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சத்தியமங்கலம் வேணுகோபாலசாமி கோவில் நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறை இணைந்து, தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுத்து தீயை அணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி தலைமையில், தீயணைப்பு துறை அலுவலர் ராஜன் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். கொங்கல்லி மல்லிகர்ஜூனா கோவில் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.