மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். இரவு 11:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு 12:15 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சின்னசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் செய்தனர்.