சிங்கம்புணரி, சிங்கம்புணரியில் வீரமுத்தியம்மன் கோயில் மாசித்திருவிழா நடந்தது. பிப்.13ல் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் நடந்த திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பிப்.20 காலை 10:00 மணியளவில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலை 6:00 மணியளவில் பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்தனர். நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் அக்னிசட்டி எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.