பதிவு செய்த நாள்
24
பிப்
2018
12:02
மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த கொடியேற்று விழாவில், ராமானுஜர் பஜனை குழுவினர், பாடல்கள் பாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.
காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, (பிப்.23) கொடியேற்றம் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான தாசர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கார மடையில் உள்ள ராமானுஜர் பஜனை குழுவை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் பெருமா ளை போற்றி பாடல்களை பாடி, ஆடினர்.
காலை, 10:00 மணியிலிருந்து, கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கும் வரை, பஜனை குழுவினர் தொடர்ந்து பாடல்களை பாடி, பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த பஜனை குழுவினர், பரிவேட்டை மைதானத்தில் உள்ள ராமானுஜர் கூடத்திலிருந்து ஊர் வலமாக வந்து, தினமும் பஜனை பாடி வருகின்றனர். விழா முடியும் வரை, ராமானுஜர் கூடத் தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.