திம்மராஜம்பேட்டையில் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வர் கோயில் மாசி கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2018 02:02
திம்மராஜம்பேட்டை : திம்மராஜம்பேட்டை கிராமத்தில், மாசி கிருத்திகை விழா நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங் கேஸ்வர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், வள்ளி சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.கிருத்திகை தோறும் சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கும். மாசி கிருத்திகையை முன்னிட்டு, (பிப்.22)-ல் காலை, 8:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரத்தில், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளினார்.