மானாமதுரை: இடைக்காட்டூர் ஆழி மணிகண்டேஸ்வரர் முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆழி மணிகண்டேஸ்வரர் சமேத சவுந்தரநாயகி அம்பிகா அம்மன்,முருகன் கோயில் மற்றும் இடைக்காடர் சித்தர் நவக்கிரக கோயிலில் திருப்பணி முடிவு பெற்றதை தொடர்ந்து 25ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
தொடர்ந்து பல்வேறு பூஜை நடைபெற்று நான்கு கால யாகசாலை பூஜை நேற்று அதிகாலை நிறைவு பெற்றது.சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை கோபுரங்களுக்கு கொண்டு சென்றனர். காலை 10:00 மணிக்கு கோபுரம் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை இடைக்காட்டூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.