பதிவு செய்த நாள்
26
பிப்
2018
12:02
எலச்சிப்பாளையம் : ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
திருச்செங்கோடு தாலுகா,பெரியமணலி ஜேடர்பாளையத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, மிகுந்த பொருட்செலவில், திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர் முடிவு செய்தனர். கடந்த, 15ல் முகூர்த்தக்கால் நட்டு, முளைப்பாரி இட்டு, கங்கணம் கட்டி விழா துவங்கியது. அதையடுத்து, புண்ணிய தீர்த்தம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி ஹோமம், முதல், இரண்டு, மூன்றாம் கால யாகம், 108 மூலிகை பொருட்க ளால் தன்னவதி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச் சிகள் நடந்தன.
(பிப். 25) அதிகாலை, 4:00 மணிக்கு, சூர்ய கும்ப பூஜை, விநாயகர் வழிபாடு, 5:00 மணிக்கு, நான் காம் கால யாகம், மூலமந்திர ஹோமம், 6:00 மணிக்கு, கோபுர கலசம், பரிவார தேவதை, அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
அதையடுத்து அபிஷேகம், அலங்காரம், சுவாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.