விக்கிரவாண்டியில் வா.பகண்டையில் 37 அடி உயரமுள்ள வெட்காளியம்மனுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2018 03:02
விக்கிரவாண்டி: வா.பகண்டையில் 37 அடி உயர வெட்காளியம்மன் மற்றும் பாலமுருகன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த வா.பகண்டையில் 37 அடி உயரமுள்ள வெட்காளியம்மன் சிலை, பால முருகன் சுவாமி கோவில் கிராம பொதுமக்களால் புதியதாககட்டப்பட்டது.
இதையொட்டி, (பிப்.24) முன் தினம் காலை 10.31 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. (பிப்.25)காலை 9 மணிக்கு இரண்டாம் காலபூஜை முடிந்து கடம் புறப்பாடு நடந்து. காலை 9.15 மணிக்கு வெட்காளியம்மனுக்கும், பால முருகன் சுவாமி கோவில்கலச த்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேக த்தை முண்டியம்பாக்கம் கண்ணன் குருக்கள் முன்னின்று செய்தார்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ரங்கநாதன் தலைமையில் ஸ்தபதி ராதாபுரம் நடராஜன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் முன்னின்று செய்திருந்தனர். பகண்டை மற்றும் சுற்றுப்புற கிராமபொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.