தேவகோட்டை:மாசி மகத்தை முன்னிட்டு ரத்தினம், வைரக்கல் பதித்த வேலுக்கு தேவகோட்டையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பழநி பாதயாத்திரையின் போது இந்த வேல் கொண்டு செல்லப்படும். பின் தேவகோட்டைக்கு மட்டுமே கொண்டு வந்து வழிபாடு நடத்தப்படும். அதன்படி குன்றக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு வேல் வந்தது. நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலிருந்து காசிநாதன் செட்டியார் ஊர்வலமாக நகர பள்ளிக்கு வேலை எடுத்து வந்தார். வழியில் பக்தர்கள் பன்னீர் அபிேஷகம் செய்து வழிபட்டனர். நகர பள்ளியில் சுப்பிரமணிய சுவாமிக்கு ரத்தினவேல் அணிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 11 மூடை அரிசியில் உணவு தயாரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. பின், ரத்தினவேல் குன்றக்குடி கொண்டு செல்லப்பட்டது.