பதிவு செய்த நாள்
03
மார்
2018
12:03
நாமகிரிப்பேட்டை: உரம்பு வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்கள் தீ மிதித்து, தேரோட்டம் நடத்தினர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் பஞ்., உரம்பு கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மாசி மாதம், மகம் நட்சத்திரத்திற்கு அடுத்தநாள், தேரோட்டம் நடந்து வருகிறது. இந்தாண்டு விழா, பிப்., 22ல் துவங்கியது. தொடர்ந்து, கருட வாகனம், குதிரை வாகனத்தில் உற்சவர் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, கிரிவலம் நடந்தது. மதியம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். 2:00 மணியளவில், திருக்கல்யாணம், மாலை, 4:00 மணிக்கு கோவிந்தா கோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. பிரார்த்தனை நிறைவேறிய பெற்றோர், தங்கள் குழந்தைகளின் எடைக்கு எடை காசு, கற்கண்டு ஆகியற்றை காணிக்கையாக வழங்கினர். இன்று இரவு, சப்தாபரணம், நாளை மதியம், 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.