நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2011 10:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் டிச.. 30 துவங்கியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில்,மார்கழி மாத ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 8ம் தேதி நடக்கிறது. இதற்கான கொடியேற்று விழா டிச. 30 நடந்தது. கோவில் கொடி மரத்தில்,உற்சவ ஆச்சாரியார் கல்யாண சபாபதி தீட்சதர் கொடியேற்றினார். ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கடும் மழை,புயலையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர்.தேர் திருவிழா, ஜன.,7ம் தேதி நடக் கிறது. மறுநாள், 8ம் தேதி அதிகாலை, நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஆயிரங்கால் மண்டப முகப் பில், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பகல், 12 மணிக்கு மேல், பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.