மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேரோட்டத்தில், தெப்பத்திருவிழா நடந்தது. காரமடை அரங்கநாதர் கோவிலில், கடந்த 1ம் தேதி தேரோட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து தண்ணீர் சேவையும், பந்தசேவையும், பரிவேட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவின் பத்தாம் நாள் இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள் சேஷவாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, தோலம்பாளையம் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் செய்து வைத்திருந்த, தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் தண்ணீரில் நான்கு புறமும் ஆடியசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தெப்பத்திருவிழாவை காண, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.