திருவாரூர் மாவட்டம், பூவனூர் சிவன்கோயிலில் அருளும் மூலவரான சதுரங்க வல்லப நாதரையும், அம்பாள் கற்பகவல்லியையும் ஆஸ்துமா நோயினால் அவதிப்படுபவர்கள் வேண்டிக்கொண்டால், விரைவில் நல்ல பலன் கிடைக்கிறதாம். மேலும் இங்குள்ள சாமுண்டீஸ்வரியை வழிபட்டால் கடன் தொல்லை, பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்னைகள் விலகுகிறதாம்!