தேனி மாவட்டம் - கம்பம் தலத்தில் கோயில் கொண்டுள்ள கவுமாரியம்மன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். இங்கே மகாசிவ ராத்திரியன்று கவுமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு இட்டு, புருவம், கண், வரைந்து, தலையில் கங்கையைச் சூட்டி, உடலில் புலித்தோலைச் சாத்தி, சிவபெருமானாகவே திருவடிவம் கொள்ளச் செய்து வழிபடுகின்றனர். அன்று இந்தக் கோலத்தில் அம்மனை தரிசிப்பது எண்ணற்ற பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை! விசேஷ நாட்களில் வீதியுலா வரும் அம்மனின் பல்லக்கை பெண்கள் மட்டுமே தூக்கி வருவது சிறப்பு!