பதிவு செய்த நாள்
09
மார்
2018
11:03
நாயக்கன்பேட்டை : நாயக்கன்பேட்டை படவேட்டம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்பேட்டை கிராமத்தில், பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, 69 ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை, 9:48 மணிக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மஹா கும்பாபிேஷகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு கிராம மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்; மாலை, 4:00 மணிக்கு படவேட்டம்மன் பரிவார மூர்த்திகளுடன் கரிக்கோலம் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.நேற்று காலை, நான்காம் கட்ட யாக பூஜைகளை முன்னிட்டு, 8:30 மணிக்கு நாகம்மன்; காலை, 9:00 மணிக்கு சப்த கன்னியர், துரவுபதி சமேத பஞ்ச பாண்டவர்கள். காலை, 9:48 மணிக்கு படவேட்டம்மன் கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.பக்தர்கள் ஓம் சக்தி...ஓம் சக்தி... என, கோஷம் எழுப்பி, அம்மனை வழிபட்டனர்.