பதிவு செய்த நாள்
02
ஜன
2012
12:01
பழநி :ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பழநி கோயிலில் பக்தர்கள் திரண்டனர். மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியையொட்டி அதிகாலை 4 மணிக்கே மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு, ஞாயிறு விடுமுறையையொட்டி பழநி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிகமான பக்தர்கள் திரண்டனர். பனியையும் பொருட்படுத்தாது சுவாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பாதயாத்திரை பக்தர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் என திரண்டனர். மலைகோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். ரோப்கார், வின்சில் மலைகோயிலுக்கு செல்ல நான்கு மணி நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. கோயில் நிர்வாகத்தால் அச்சிடப்ப பழநி முருகனின் ராஜ அலங்கார படமும் மலைகோயிலில் விற்பனை செய்யப்பட்டது. காலண்டர், ஆண்டு முழுவதும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார்.