Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உண்டியலில் ரூ.16.20 லட்சம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

பதிவு செய்த நாள்

16 மார்
2018
02:03

அவிநாசி : கருவலுார் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் 30ம் தேதி துவங்குகிறது. ஏப்.,4 முதல் 6ம் தேதி வரை தேரோட்டம் நடக்கிறது. அவிநாசி அருகேயுள்ள, கருவலுாரில், பல நுாறு ஆண்டு பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில், தேர்த்திருவிழா, வரும், 30ம் தேதி, கிராம சாந்தி உற்சவத்துடன் துவங்குகிறது. 31ம் தேதி, திருவிழா கொடியேற்றமும், அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏப்.,1ல், பூத வாகன காட்சி, 2ல், ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,3ல், மலர் பல்லக்கு உற்சவம், அம்மன் அழைப்பு மற்றும் சுவாமி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை, 2:00க்கு, தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அன்றும், அடுத்த இரண்டு நாட்களும் தேரோட்டம் நடக்கிறது. 7ம் தேதி பரிவேட்டை, அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், தெப்ப உற்சவம், காமதேனு வாகன காட்சி நடக்கிறது. 8ம் தேதி, அம்மன் மகா தரிசனம், சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீர், அன்ன வாகன காட்சி, கொடி இறக்கம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11ம் தேதி, மறு பூஜை, பாலாபிேஷகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar