கன்னிவாடி, கன்னிவாடி மேற்குத்தெரு மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், கரகம் பாலித்தல், மலர் அலங்காரம், உற்ஸவர் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு, அக்னிச்சட்டி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முளைப்பாரி அழைப்பு, மஞ்சள் நீராடலுடன் சுவாமி கங்கை புறப்பாடு நடந்தது.