பதிவு செய்த நாள்
22
மார்
2018
01:03
சேலம்: சேலம், ஜாகீர்அம்மாபாளையம், காவடி பழநியாண்டவர் ஆசிரமத்தில், 57ம் ஆண்டு பங்குனி பிரமோத்சவம், இன்று காலை, சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. மார்ச், 28ல் திருக்கல்யாண உற்சவம், 29ல் சந்தன காப்பு, 30ல் தங்க கவச சாத்துபடியில் சிறப்பு பூஜை, மாலை, 1,008 பால்குட ஊர்வலம், மார்ச், 31ல் சத்தாபரணம், ஏப்., 1ல் விடையாற்றி உற்சவம் ஆகியவை நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
* ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர விழா கொடியேற்றம், இன்று நடக்கிறது. 28 இரவு திருக்கல்யாணம், 30ல் அதிகாலை, 2:00 மணிக்கு, மூலவருக்கு பால் அபி?ஷகம், ராஜ அலங்காரம் நடக்கிறது. மாலை, 4:45 மணிக்கு, திருத்தேர் வடம் பிடிக்கும் விழா, ஏப்., 1ல், சப்தாவர்ணம், மாவிளக்கு பூஜை, 2 காலை, மகா தரிசனத்துடன் விழா நிறைவடைகிறது.